சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

இலக்கிய சமூகச் சொற்பொழிவு நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில், 34-ஆவது இலக்கியம் சார்ந்த சமூகச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:32 am IST

சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில், 34-ஆவது இலக்கியம் சார்ந்த சமூகச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓவியர் மு.கலைச்செழியன் தலைமை வகித்தார். வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், தலைமை ஆசிரியர் ச.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கடையேழு வள்ளல்களில் மலையமான் திருமுடிக்காரி என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி, மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் என்ற தலைப்பில் புலவர் பெ.சயராமன், காமராஜரின் ஆட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன், குறளும் - நாடும் என்ற தலைப்பில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சி.சின்னப்பதமிழர், பனகல் அரசர் என்ற தலைப்பில் முனைவர் தே.சாந்தகுமார் ஆகியோர் பேசினர்.
கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் ம.சுப்பராயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திராவிடர் கழக நிர்வாகி பெரியார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.