திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டவர் ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டார்.
பைக்குகள் தொடர் திருட்டு தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பிறப்பித்த உத்தரவின்பேரில், திண்டிவனம் டிஎஸ்பி வி.வி.திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது:
காவேரிப்பாக்கம் மொட்டையன் தெருவில் போலீஸார் ஞாயிற்றுகிழமை காலை 7 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சையத் இப்ராகிம் (38) என்பவர், பதிவு எண் இல்லாத பைக்கை ஓட்டி வந்தார். அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், திண்டிவனம் நகரில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதையும், மொத்தம் 14 பைக்குகளை திருடியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த அனைத்து பைக்குகள், உதிரி பாகங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் என்றார் எஸ்பி.
இதுதொடர்பாக தனிப் படை உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன் உள்ளிட்டோரை எஸ்பி பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








