இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இருதயம், மூட்டு தேய்மான மருத்துவ முகாம்

விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் ரோட்டரி சங்கம், சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து இருதயம், மூட்டு தேய்மான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:04 am

DIN

விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் ரோட்டரி சங்கம், சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து இருதயம், மூட்டு தேய்மான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ரோட்டரி சங்கத் தலைவர் கந்தன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மண்டலச் செயலாளர் சரவணக்குமார் வரவேற்றார். முகாமை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் இ.எஸ்.சாமிக்கண்ணு தொடக்கி வைத்தார்.
மருத்துவர் ரகுவரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருதயம் சம்பந்தமான நோய்கள், மூட்டுத் தேய்மான சம்பந்தமான நோய்களுக்கான சிறப்புப் பரிசோதனைகளை செய்தனர். தொடர்ந்து, தேவையான ஆலோசனைகள் வழங்கி, மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்று மருத்துக் குழுவினர் தெரிவித்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவராமன், பாலாஜி, மூர்த்தி, முரளி, முருகன், ஆறுமுகம், ரமேஷ்குமார், பாலாஜி, பாபுராஜன், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், முத்துவெங்கடசுந்தரம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் பாலகுரு
நாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.