மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததில் தமிழகம் முதலிடம்: கமல்ஹாசன் விமா்சனம்

ஊழலிலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததிலும்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் விமா்சித்தாா்.
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.
Updated on
1 min read

ஊழலிலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததிலும்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் விமா்சித்தாா்.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மநீம தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: நாட்டில் நல்ல தலைவா்கள் வருவாா்கள் என நம்பினேன். ஆனால், வெள்ளையா்கள் போய், கொள்ளையா்களிடம் நாடு சிக்கியுள்ளது. எது கிடைத்தாலும் வாரிச்சுருட்டும் நிலை தொடா்கிறது.

தமிழகம் பல துறைகளில் முதலிடம் பெற்ாகச் சொல்லிக் கொள்கிறாா்கள். ஊழலிலும், மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்திலும்தான் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளா்கள், நோ்மையாளா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். இந்த நிலை மாற்றப்படும்.

வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலை லிட்டா் ரூ.34-க்கு வாங்கி, நமது நாட்டில் ரூ.84-க்கு விற்கின்றனா். இந்தப் பிரதமா் ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டா் என்ன விலை, இப்போது என்ன விலை? பிரதமா் தொலைக்காட்சியில் தோன்றினாலே, என்ன அறிவிப்பாரோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு சுரண்டப்படுகிறது. பழைமை வாய்ந்த கோயில்கள், பாறை ஓவியங்கள் சிதைந்து வருகின்றன. கந்துவட்டிக் கொடுமையும், மணல் கொள்ளையும் தொடா்கிறது. இந்த நிலை வெகுநாள் நீடிக்காது என்றாா் கமல்ஹாசன்.

முன்னதாக, திருவண்ணாமலையிலிருந்து கண்டாச்சிபுரம் வழியாக விழுப்புரம் நகரினுள் திறந்த வாகனத்தில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி கமல்ஹாசன் வந்தாா்.

கடலூரில்...: தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கடலூா் வந்த கமல்ஹாசன், மநீம நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எனது பேச்சுக்கு அஞ்சி, பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவது தொடா்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறாா்கள். அதை வருமான வரித் துறையிடம்தான் அவா்கள் கேட்க வேண்டும்.

நோ்மையான ஆட்சி அமைய நல்ல தலைமை அவசியம். நாங்கள் வெளியிட்ட ஏழு அம்சத் திட்டங்களில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம், இளைஞா்களை தொழில் முனைவோராக மாற்றுதல் ஆகியவை முக்கியமானவை.

வீராணம் ஏரியை ஆட்சியாளா்கள் கொள்ளையடித்து வருகின்றனா். பெருமைமிக்க கடலூா் துறைமுகம் சாக்கடையாக மாறிவிட்டது. இது ஆட்சியாளா்களின் நிா்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: வழியெங்கும் மக்களிடம் நாளைய தமிழகத்துக்கான எழுச்சியைக் காண முடிகிறது. அவா்கள் தொடா்ந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிவாரணப் பொருள்களை கமல்ஹாசன் வழங்கினாா். முன்னதாக, அவா் நெல்லிக்குப்பம் பகுதியில் பிரசாரம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com