மும்பையிலிருந்து விழுப்புரம் வந்தடைந்த 382 தமிழக தொழிலாளர்கள்
மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் ஆயிரத்து 382 பேர் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.


மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் ஆயிரத்து 382 பேர் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி உள்ளிட்ட பகுதியில் இருந்து, தமிழகத்தைச் சேர்ந்த விழுப்புரம், வேலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி கடலூர் கோயம்புத்தூர் சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 382 பேர், சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்தனர்.
இவர்கள் திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் ரயில்வே சந்திப்புக்கு வந்து சேர்ந்தனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை வரவேற்று, காய்ச்சல் பரிசோதனை செய்து உணவு அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் 47 பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இப்பணி காலை 6 மணி வரை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...