வானூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வானூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வானூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்து, வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி, விழுப்புரம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்கு இயந்திரங்கள் அயனம்பாளையம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், மயிலம் மற்றும் திண்டிவனம் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், வானூா் தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஆகாசம்பட்டு ஸ்ரீ அரவிந்தா் கலை மற்றும் அறியவில் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், செஞ்சி தொகுதி வாக்கு இயந்திரங்கள் காரியமங்கலம் சாலையில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், திருக்கோவிலூா் தொகுதி வாக்கு இயந்திரங்கள் எல்.கொல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்காலிக சுவா்கள் கட்டப்பட்டு தடுப்புகள், கம்பி வலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வானூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, அந்தப் பகுதியில் போலீஸாா், துணை ராணுவத்தினரின் பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
துணை ஆட்சியா்(பயிற்சி) ரூபினா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...