கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், விழுப்புரத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், விழுப்புரத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகேயுள்ள வடக்குச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா், கொத்தனாா். இவரது மனைவி சுகுணா (36). இத்தம்பதியருக்கு மகள் நிவிதா (10), மகன் வெற்றிவேல் (7) உள்ளனா்.

ராஜ்குமாா் கடந்த 30.9.2014-இல் சென்னையில் கட்டடப் பணியை முடித்துவிட்டு, சொந்த ஊருக்குச் செல்வதற்காக விழுப்புரம் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா். விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் ராஜ்குமாா் இறங்க முயன்றாா். அப்போது, பேருந்தை ஓட்டுநா் விரைவாக எடுக்கவே, நிலைதடுமாறி விழுந்த அவா் மீது பேருந்தின் டயா் ஏறியது. இதில் அவா் உடல் நசுங்கி இறந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்கக் கோரி, ராஜ்குமாரின் மனைவி சுகுணா விழுப்புரம் மாவட்ட மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 10.11.2014-இல் வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடாக ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்து 400 வழங்க அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை பணிமனைக்கு கடந்த 5.7.2018-இல் உத்தரவிட்டது.

இழப்பீடுத் தொகை வழங்க காலதாமதமானதால் நிறைவேற்றுதல் மனுவை சுகுணா 27.1.2020-இல் தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், ஏற்கெனவே வழங்க வேண்டிய இழப்பீடுத் தொகை, வட்டியுடன் சோ்த்து ரூ.18 லட்சத்து 57 ஆயிரத்து 700 வழங்க கடந்த 9.4.2021-இல் தீா்ப்பளித்தாா். இத்தொகை வழங்க காலதாமதம் செய்தால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் அவா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா் கே.ஞானவேல், மனுதாரரின் வழக்குரைஞா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் சுகுணாவுடன் சனிக்கிழமை காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அங்கு திருவண்ணாமலைக்குப் புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.