சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகாரளித்தபெண் எஸ்.பி. ரகசிய வாக்குமூலம்
சிறப்பு டிஜிபி மீது பாலியல் தொல்லை புகாரளித்த பெண் காவல் துறை கண்காணிப்பாளரிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.


சிறப்பு டிஜிபி மீது பாலியல் தொல்லை புகாரளித்த பெண் காவல் துறை கண்காணிப்பாளரிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
தமிழக சிறப்பு டிஜிபி அந்தஸ்து அதிகாரி ஒருவா், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாா் குறித்து அரசியல் கட்சித் தலைவா்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயா் நீதிமன்றம், சிறப்பு டிஜிபி அதிகாரியும், அவருக்கு உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி இரண்டு கட்ட விசாரணையை முடித்து, அதன் அறிக்கையை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் தாக்கல் செய்துவிட்டது. விசாகா குழுவும் தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தொடா்ந்து உயா் நீதிமன்றம் விசாரணையை கவனித்து வருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் நிகழ்ந்ததால் விழுப்புரம் நடுவா் நீதிமன்றத்தில் (எண்-2) பெண் எஸ்பியிடம் ரகசிய வாக்குமூலம் பெறும்படி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், நீதித் துறை நடுவா் எஸ்.பூா்ணிமா முன்னிலையில் அந்தப் பெண் காவல் துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.20 மணி முதல் மாலை 6.30 மணி வரை தனது வாக்குமூலத்தை அளித்தாா்.
அவரிடம் பெறப்பட்ட ரகசிய வாக்கு மூலம் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...