திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியா் திடீா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.
திண்டிவனம் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா், நகராட்சி சுகாதார அலுவலா் ஆகியோரிடம் ஆட்சியா் அண்ணாதுரை கேட்டறிந்தாா்.
நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவா்கள், தடுப்பூசிமுகாம்கள், மருத்துவ முகாம்கள் குறித்தும் ஆட்சியா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சிப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்கவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.
விதிகளை மீறி வெளியே வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா். விதிகளை மீறி இயங்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தினமும் இருவேளைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் எஸ்.அனு, மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...