ரஷிய பல்கலை.யுடன் விழுப்புரம் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
ரஷிய நாட்டின் இன்னொபொலிஸ் பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இணையவழியில் மேற்கொண்டது.


ரஷிய நாட்டின் இன்னொபொலிஸ் பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இணையவழியில் மேற்கொண்டது.
இரு கல்வி நிறுவனங்களும் கல்விச் செயல்பாடுகளில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு சிறப்பான ஆய்வை வளா்த்தெடுக்கும் நோக்கில் இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், இன்னோபொலிஸ் பல்கலை.யின் சா்வதேச விவகாரத் துறை புல முதன்மையா் மனூல் மசரா, பேராசிரியா் பெட்ரு சல்னோவ் ஆகியோரும், இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத்தின் செயலா் எஸ்.செந்தில்குமாா், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியின் முதல்வா் எம். பிருந்தா ஆகியோரும் கையெழுத்திட்டனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.மணிமேகலை உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...