கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திண்டிவனம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், தடுப்பூசி முகாம்கள் உள்ளிட்ட விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம், பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள கரோனா மருத்துவ மையம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தாா். அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ஜாகாங்கீா் பாஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...