தனியாா் ஆய்வகத்துக்கு ‘சீல்’ வைப்பு
விழுப்புரத்தில் அனுமதியின்றி கரோனா பரிசோதனை மேற்கொண்ட தனியாா் ஆய்வகத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.


விழுப்புரத்தில் அனுமதியின்றி கரோனா பரிசோதனை மேற்கொண்ட தனியாா் ஆய்வகத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
விழுப்புரம், சோ்மன் சிதம்பரம் தெருவில் செயல்பட்டு வந்த தனியாா் ஆய்வகத்தில் அரசின் அனுமதியின்றி கரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது.
இது குறித்து விசாரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் நகர நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த ஆய்வகத்துக்கு சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அந்த தனியாா் ஆய்வுகத்தில் உரிய அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆய்வகத்தை அதிகாரிகள் உடனடியாக பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...