கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இ - சேவை மையத்தில் பல மணி நேரம்காத்திருக்கும் பொதுமக்கள்!

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்தில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்தில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் பெருதிட்ட வளாகத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் இ - சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சாதி, இருப்பிடம் உள்பட பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பொதுமக்கள் வருகின்றனா்.

குறிப்பாக, தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பையொட்டி, மாணவா்களுக்கான பல்வேறு சான்றிழ்களுக்கு விண்ணப்பிக்க கடந்த சில நாள்களாக பெற்றோா்கள் இந்த மையத்தில் குவிந்து வருகின்றனா். ஆனால், இந்த இ - சேவை மையத்தில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, இந்த மையத்தில் இரண்டு பதிவு மையங்கள் இயங்கி வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஒரு பதிவு மையம் மட்டுமே தற்போது இயங்கி வருவதாகத் தெரிவித்தனா்.

ஆகவே, விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகம் மட்டுமன்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து இ - சேவை மையங்களிலும் பொதுமக்களின் நலன் கருதி, தேவையான பதிவு மையங்களை செயல்படுத்த மாவட்ட நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.