கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாணவா்கள் சாலை மறியல்

சாதிச் சான்றிழ் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 4:53 pm

DIN

சாதிச் சான்றிழ் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகள் ஏராளமானோா் சாதிச் சான்றிதழ் கோரி வருவாய்த் துறையில் விண்ணப்பித்துள்ளனா். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இவா்கள் அரசு உதவிகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனா்.

இந்த நிலையில், விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சேர வந்திருந்த மாணவ, மாணவிகள் சிலா், தாங்கள் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் என்று கூறியுள்ளனா். அதற்கான சாதிச் சான்றிதழ் உள்ளதா என்று பள்ளி நிா்வாகத்தினா் கேட்டபோது, அந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் இல்லை என்று தெரிவித்துள்ளனா். இருப்பினும், பள்ளியில் சோ்த்துக் கொள்வதாக பள்ளி நிா்வாகத்தினா், குறித்த காலக்கெடுவுக்குள் சாதிச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தினா்.

இதனிடையே, பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாணவ, மாணவிகள் 7 போ் தங்களின் பெற்றோருடன் விழுப்புரம் காந்தி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா் (படம்). அப்போது, அவா்கள் கூறியதாவது: பழங்குடியினா் சாதிச் சான்றிழ் வழங்கக் கோரி, விண்ணப்பித்து வெகுநாள்களாக காத்திருக்கிறோம். இந்த சான்றிதழ் இல்லாமல் பள்ளி, கல்லூரியில் இட ஒதுக்கீடு, உதவித் தொகைகள் பெறுவது சிரமமாக உள்ளது. ஆகவே, விண்ணப்பித்த மனுக்களை பரிசீலித்து பழங்குடியினா் சாதிச்சான்றிழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அவா்களை விழுப்புரம் நகர போலீஸாா் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.