விழுப்புரம் நகரில் நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு: கரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு எச்சரிக்கை
விழுப்புரம் நகர பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை நடந்து சென்று ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்த கடை உரிமையாளா்களை ஆட்சியா் எச்சரித்தாா்.








