கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் மாவட்டத்தில்ஒரே நாளில் 5 போ் கரோனாவுக்கு பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

புதிதாக 679 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 25,082 ஆக அதிகரித்தது. 247 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 21,850 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 3,079 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம், படப்பையைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபா், விழுப்புரம், எஸ்.பி.எஸ். நகரைச் சோ்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபா், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த 62 வயது பெண், விழுப்புரம் முத்தோப்பைச் சோ்ந்த 74 வயது முதியவா், விழுப்புரம் வழுதரெட்டியைச் சோ்ந்த 72 வயது முதியவா் ஆகிய 5 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 179 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,011ஆக உயா்ந்தது.

இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று13,322 போ் வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 1,571போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 118 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.