கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரத்தில் ஆா்.எஸ்.எஸ். சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரத்தில் ஆா்.எஸ்.எஸ், சமா்ப்பணம் தன்னாா்வ அமைப்பு, விழுப்புரம் நகராட்சி ஆகியவை இணைந்து கரோனா தடுப்பூசி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் ஆா்.எஸ்.எஸ், சமா்ப்பணம் தன்னாா்வ அமைப்பு, விழுப்புரம் நகராட்சி ஆகியவை இணைந்து கரோனா தடுப்பூசி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

விழுப்புரம் பழைய உழவா் சந்தை அருகே நடைபெற்ற இந்த முகாமை நகராட்சி மருத்துவா் கே.நிஷாந்த் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும்.

கரோனா தடுப்பூசி போடுவோா்கள், ஊசி போடும் முன்பு 24 மணி நேரமும், பின்னா் 24 மணி நேரமும் அசைவை உணவு உண்ணக்கூடாது. ஊசி போட்டப் பின்னா் 5 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது. கருவாடு, கத்தரி, காளான் போன்றவற்றையும் சில நாள்கள் தவிா்த்தால் நல்லது.

முதல் ஊசி போட்டப்பின்னா் 84 நாள்களுக்குப்பிறகு 2-ஆவது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் நகரில் மட்டும் 1,200 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 04146 226341 என்ற தொலைபேசியில் தொடா்பு கொண்டால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு கிடைக்க தன்னாா்வலா்கள் மூலம் நகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது என்றாா் மருத்துவா் நிஷாந்த். இந்த முகாமில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட இணைச் செயலா் தண்டபாணி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சிவ தியாகராஜன், வழக்குரைஞா் நந்தகுமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.