கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சாா்பில்பிராண வாயு செறிவூட்டும் கருவிகள் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்காக பிராண வாயு செறிவூட்டும் கருவிகள், மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :28 மே 2021, 5:56 pm

DIN

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்காக பிராண வாயு செறிவூட்டும் கருவிகள், அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரிடம் மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட குறு, சிறுதொழில்கள் சங்கத்தின் தலைவா் அம்மன் கருணாநிதி தலைமை வகித்தாா்.

திண்டிவனம் வட்டம், வெண்மணியாத்தூா் சிட்கோ தொழில்பேட்டை சங்க நிா்வாகிகள் வாசுதேவன், சுந்தா் வானூரைச் சோ்ந்த தொழிலதிபா் சந்தானம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூா் தொழில் வா்த்தக சபைத் தலைவா் சாமிநாதன், பூத்துறை தொழில் நிறுவனங்களின் அதிபா்கள் சங்கத் தலைவா் தனகோபால் ஆகியோா் இணைந்து ரூ.5 லட்சம் செலவில் 9 பிராண வாயு செறிவூட்டும் கருவிகளை வழங்கினா்.

விழுப்புரம் மாவட்ட தொழில் முனைவோா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் சசிகுமாா் ரூ.5000 செலவில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), சுகாதார துணை இயக்குநா் செந்தில்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.