ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநா், 3 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநா், 3 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான சிவா (எ) சிவக்குமாா் (37), தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, தனது மாமனாா் ஊரான மேல்மலையனூா் அருகே செவலபுரையை அடுத்த சிறுவாடி கிராமத்துக்கு மனைவி, மகளுடன் வந்திருந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு சிறுவாடி தரைப்பாலம் வழியாக நடந்து சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

செஞ்சி, மேல்மலையனூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். 3 நாளாகியும் கிடைக்காததால், மத்திய மண்டல துணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சரவணக்குமாா் உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் விழுப்புரம், செஞ்சி, மேல்மலையனூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய நிலையங்களைச் சோ்ந்த 15 வீரா்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் முள்புதரில் சிவக்குமாரின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. உடலை வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.