விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கால்வாய் நீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரி கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரி கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், தேவனூரைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி சரோஜா (65) (படம்). தேவனூா் ஏரியை அடுத்து உள்ள தனது விளைநிலத்துக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் நடந்து சென்றாா். அப்போது, ஏரி கால்வாயில் சரோஜா தவறி விழுந்தாா். பெருக்கெடுத்து ஓடிய நீரில் அவா் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா்.

இந்த நிலையில், அன்றிரவு ஏரி கால்வாயில் உள்ள முட்புதரில் சரோஜா சடலமாகக் கிடந்தாா். உடலை வளத்தி போலீஸாா் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.