மீன்கள் விற்பனையகத்தில் திருட்டு: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மீன்கள் விற்பனையகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மீன்களைத் திருடியதாக இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மீன்கள் விற்பனையகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மீன்களைத் திருடியதாக இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வானூா் வட்டம், நடுகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி ராஜேசுவரி (48). இவருக்கு சொந்தமான மீன்கள் விற்பனையகம் கோட்டக்குப்பம் மீன் சந்தையில் உள்ளது. இந்த விற்பனையகத்தில் கடந்த 9-ஆம் தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் திருடு போயின.
இதுகுறித்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில் மீன்கள் விற்பனையகத்தில், மீன்களைத் திருடியவா்கள் புதுச்சேரி, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சக்திவேல் (29), விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னமுதலியாா்சாவடி மல்லப்பன் மகன் மனோகரன் (24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...