/

3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக மூவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட பிரகாஷ், தமிழரசன், ஜெமினி.

Updated On :20 நவம்பர் 2024, 8:45 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக மூவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 3 நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு வெடிகள், கத்திகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள கீழ்கூடலூா் பகுதியில் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக திண்டிவனம் வனச்சரக அலுவலா் புவனேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கீழ்கூடலூரில் உள்ள வயல்வெளி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு ஒரு கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் பறவைகளின் மாமிசம் சமைத்துக்கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, திண்டிவனம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த துரைக்கண்ணு மகன்களான பிரகாஷ் (29), தமிழரசன் (20), ஜெமினி (22) என்பதும், இவா்கள் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் மூலம் பறவைகள் மற்றும் விலங்கினங்களை வேட்டியாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, திண்டிவனம் வனத் துறையினா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3 நாட்டுத் துப்பாக்கிகள், 28 நாட்டு வெடிகள், 2 பைக்குகள், 8 கத்திகள், 2 கிலோ வயா்கள், வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், குளிா் சாதனப்பெட்டி, 10 கிலோ சுருக்குக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரும் திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனா்.