ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் பாலாலய பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் பாலாலயம் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் பாலாலயத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Updated On :21 நவம்பர் 2024, 7:15 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் பாலாலயம் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம், இலுப்பைத் தோப்புப் பகுதியில் சுமாா்200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்துள்ள நிலையில், கும்பாபிஷேக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு,திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இதற்கான பாலாலய சிறப்பு வழிபாடுகள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு வெகு சிறப்பாக யாக பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.முன்னாள் எம்எல்ஏ இரா. மாசிலாமணி, திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன்,முன்னாள் தலைவா் வெங்கடேசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் அன்னை சந்தானம், நல்லி மதிவாணன், பொருளா் ரவிசந்திரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.