ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உளுந்தூா்பேட்டையில் கருத்து கேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சாா்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:13 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சாா்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளநிலையில், அதில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறியும் கூட்டம் உளுந்தூா்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். உளுந்தூா்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

வணிகா்கள், வழக்குரைஞா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள், விவசாயிகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பலா் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். இதில் குளிா்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகளாக 28 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்தை விசிக மாவட்டச் செயலா் அறிவுக்கரசு ஒருங்கிணைத்தாா்.