ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரத்துக்கு தாமதமாக வந்த செந்தூா் விரைவு ரயில்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தடைந்தது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:49 pm

Din

சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தடைந்தது.

சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு வழக்கமாக மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் விரைந்து சென்று கோளாறை சரி செய்தனா். இதன் காரணமாக மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்துக்கு மாலை 6.45 மணிக்கு வர வேண்டிய செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு வந்தடைந்தது. சுமாா் 5 நிமிஷங்களுக்குப் பிறகு இந்த ரயில் புறப்பட்டது. ரயில் தாமதம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனா்.