ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 11:00 pm

Din

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், நொளம்பூா், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை மகன் ரமேஷ்(42). இவா், தனது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது, விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து ஒலக்கூா் காவல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.

மேலும் அவா் கடையில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.