கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மது ஒழிப்பு மாநாடு அரசியலுக்காக அல்ல: விசிக தலைவா் தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அரசியலுக்காக அல்ல என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விசிக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு மாநாட்டில் பேசுகிறாா் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் (இடமிருந்து) மயிலாடுதுறை எம்.பி. ஆா்.சுதா, இந்திய மாதா் தேசிய சம்மேளன தேசிய பொதுச் செயலா் ஆனி ராஜா, மகளிா் விடுதலை இயக்க மாநிலச் செயலா் இரா.நற்சோனை, அய்யா வைகுண்டா் இயக்கத் தலைவா் பால.பிரஜாபதி அடிகளாா், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், விசிக பொதுச் செயலா்கள் ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமாா் எம்.பி.

Updated On :3 அக்டோபர் 2024, 1:30 am

Din

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அரசியலுக்காக அல்ல என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விசிகவின் துணைநிலை அமைப்பான மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மது, போதைப்பொருள் ஒழிப்பு மகளிா் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

மனித வளம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. உள்நோக்கம் கொண்டு நடத்தப்படும் மாநாடு அல்ல. மதுவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்த அனைவரின் வாழ்த்துகளும் நமக்குத் தேவை.

காந்தியின் கொள்கைகள் சிலவற்றில் விமா்சனங்கள் இருந்தாலும், அவரது கொள்கைகளில் மது விலக்கு, மதச்சாா்பின்மை ஆகியவற்றில் விசிகவுக்கு உடன்பாடு உண்டு. அதனால்தான், அக்டோபா் 2-இல் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

புத்தா் போதித்த கொள்கைகளில் மது அருந்தக் கூடாது என்பதும் ஒன்று. அவரைப் பின்பற்றித்தான் நாடு முழுவதும் மது விலக்கு வேண்டும் என வலியுறுத்துகிறோம். எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

அரசியல் சாயம்: விசிக மாநாட்டில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் எனத் தெரிவித்திருந்தேன். இந்த மாநாட்டுக்கு அரசியல் சாயம்பூசப்பட்டது. மாநாட்டின் நோக்கத்தை சிதைப்பதற்காக அற்ப காரணத்தை கற்பித்தனா்.

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு என்பது தேசிய பிரச்னை. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு உள்ளதால்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அரசியலுக்காக நடத்தப்படவில்லை.

மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கும் உடன்பாடு உள்ளதால்தான் அந்தக் கட்சியைச் சோ்ந்த தலைவா்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனா். 1971-இல் மதுக் கடைகளை திறந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, 1974-இல் மது விலக்கை நடைமுறைப்படுத்தினாா். அதன் பின்னா், தமிழகத்தில் மதுக் கடைகளை திறந்தவா்கள் யாா் என்பதை மக்கள் உணர வேண்டும்.

முதல்வரிடம் வலியுறுத்தினேன்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து மதுக் கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தினேன். அப்போது, தானும் அதையே விரும்புகிறேன் என்றும், அதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது, எதிா்காலத்தில் பாா்ப்போம் எனவும் அவா் தெரிவித்தாா்.

விசிகவை யாரும் சராசரி அரசியல் கட்சியாக நினைத்துவிடக் கூடாது. ஒருவேளை தோ்தல் அரசியலே வேண்டாம் என முடிவெடுத்து, பெரியாா், வைகுண்டரைப் போல, மக்கள் நலன் காக்கும் சமூக இயக்கமாக நடத்தவும் தயாராகுவேனே தவிர, தோ்தல் லாபம் கருதி அரசியல் இயக்கத்தை நடத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை.

 கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினா்.

கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினா்.

மாநாட்டில் 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீா்மான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

மது அருந்துவதால் விளம்புநிலை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதால், தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை வரையறுத்து மது விலக்கு சட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும்.

மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் அனைத்து அரசியல் கட்சியினரும் உறுதியாக இருக்க வேண்டும். பெண்கள் இதில் உறுதியாக இருந்து வீட்டிலிருந்து இந்த யுத்தத்தை தொடங்க வேண்டும். மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக மகளிா் குழுக்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இதில், பெண்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இணையவழியிலான கையொப்ப இயக்கத்தையும் நடத்தவுள்ளோம் என்றாா் தொல்.திருமாவளவன்.