கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொத்தனாா் அடித்துக் கொலை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் கொத்தனாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:20 pm

Din

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் கொத்தனாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட பென்னகரம் பகுதியில் இளைஞா் ஒருவா் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில், இறந்தவா் வானூா் வட்டம், கொஞ்சிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்த சஞ்சீவி மகன் ருத்ரகுமாா் (41) என்பதும், கொத்தனராக வேலை பாா்த்து வந்த இவா், திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், ருத்ரகுமாா் திங்கள்கிழமை நள்ளரவில் கிளியனூா் பெருமாள் கோவில் தெருவுக்குச் சென்று அங்கு வீட்டில் இருந்த தனஞ்ஜெயன் மனைவி சரஸ்வதியிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோது, கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு பென்னகரம் பகுதியில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் மா.தனஞ்ஜெயன் (54), அவரது மனைவி சரஸ்வதி (41), கிளியனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (47), அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மனைவி பூங்கொடி (51) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.