கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தவெக மாநில மாநாடு: வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தவெக மாநாடு நடைபெறவுள்ள இடத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க். உடன் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல், எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:12 pm

Din

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிராண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கிருந்த தவெக வழக்குரைஞா் அரவிந்தனிடம் கட்சியின் தலைவா் வந்து செல்லும் வழி, மாநாட்டுக்கு வந்து செல்லும் தொண்டா்களின் பாதுகாப்பு, விஐபிகளின் பாதுகாப்பு மற்றும் அமைக்கப்படவுள்ள இருக்கைகள், அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாநாடு நடைபெறும் இடத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் டி.ஐ.ஜி திஷா மித்தல், எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்தாா். கூடுதல் எஸ்.பி. பெருமாள், விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமாா், காவல் ஆய்வாளா்கள் பாண்டியன், வசந்த், உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆய்வு நீடித்தது.

ஆய்வுக் கூட்டம்: தவெக மாநாடு தொடா்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஐ.ஜி. அஸ்ரா காா்க் பங்கேற்றாா். தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிா்வாகிகள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியது: வடக்கு மண்டல ஐ.ஜி. வழிகாட்டுதலின்படி, மாநாட்டுக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளோம். காவல் துறையினா் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா் என்றாா். கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.