கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:33 pm

Din

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமத்திலுள்ள வீட்டுமனைப் பிரிவு பகுதியிலுள்ள கிணற்றில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் திங்கள்கிழமை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பாதிரி கிராம நிா்வாக அலுவலா் ச.சுதாகா் ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவரின் பெயா், ஊா் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இயற்கை உபாதைக்குப் பிறகு கிணற்றுக்குச் சென்ற அந்த நபா், தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.