விழுப்புரத்தில் அக்.18-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது.


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியல் போன்ற கல்வித் தகுதிகளைக் கொண்ட வேலை தேடும் இளைஞா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுகளின் வேலைவாய்ப்பு அலுலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
முகாமில் பங்கேற்க விரும்பும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...