கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் துறை ஆய்வுக் கூட்டம்: ஏடிஜிபி பங்கேற்பு

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுலகத்தில் ஏடிஐபி டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:37 pm

Din

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுலகத்தில் ஏடிஐபி டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நடிகா் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் திரளானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில்

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்.பி.க்கள் தீபக் சிவாச் (விழுப்புரம்), ராஜாராம் (கடலூா்), ரஜத் சதுா்வேதி (கள்ளக்குறிச்சி) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினா் தெரிவித்தனா்.