முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தின் முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முகையூா் ஒன்றியம், இருதயபுரம் ஊராட்சியில் பேருந்து பயணியா் நிழற்குடை அமைக்கும் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி.







