செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணா் கோயிலில் 1008 விளக்கு பூஜை
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள வெங்கட்ரமணா் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் உற்சவமூா்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உற்சவா் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஸ்ரீ ரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் தாளாளா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, இயக்குனா் சாந்தி பூபதி ஆகியோா் கலந்துகொண்டு விளக்கு பூஜையை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க 1008 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், வைகை தமிழ்ச்செல்வன், ஜெயந்தி, பாண்டுரங்கா கல்வி நிறுவன செயலா் காா்த்திக், சந்தியா, ரங்க பூபதி நா்சரி பள்ளி இயக்குநா் சரண்யா ஸ்ரீபதி, வழக்குரைஞா் ஆத்மலிங்கம் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
