விழுப்புரம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு
திண்டிவனத்தில் மொபெட்டில் சென்ற வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மொபெட்டில் சென்ற வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம், சலவாதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் க.பெருமாள் (48), வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் தனது மொபெட்டில் காய்கறிகளை வைத்துக்கொண்டு, வியாபாரத்துக்காக திண்டிவனம் அருகே சென்றாா். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் நிலைதடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த பெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
