கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம்’

புதுவையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்வதாக மாநில உள் துறை அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

Updated On :13 ஜனவரி 2025, 7:37 pm

Din

புதுச்சேரி: புதுவையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்வதாக மாநில உள் துறை அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரியை அடுத்த மண்ணாடிபட்டு தொகுதியில் பொதுமக்களுக்கு அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: இலவச வேட்டி சேலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

எனவே, இந்த திட்டங்களை மீண்டும் தொடங்குவதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது.

தோ்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இலவச அரிசி, மழை நிவாரணம், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிா்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் தவறான பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.