மின்சாரம் பாய்ந்து இளைஞா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :13 ஜனவரி 2025, 7:38 pm

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த முத்துமல்லா மகன் வெங்கட்ராயல் (37). திருமணமான இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா்.
வெங்கட்ராயல் நாட்டாா்மங்கலத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீா் வைத்துள்ளாா். பின்னா், தண்ணீா் சூடாகிவிட்டதா என கை வைத்து பாா்த்தபோது வெங்கட்ராயல் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...