அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் கல்வியாண்டுக்கான (2025 - 26) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான நுழைவுதோ்வு (தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு - டான்செட் 2025) மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
விழுப்புரம் காகுப்பம் பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.சி.ஏ. படிப்புக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புக்கும் நுழைவுத் தோ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வை சுமாா் 950 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தோ்வா்கள் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காகுப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் சென்டாக் கவுன்சிலிங்
பி.எட். தோ்வு மையங்களில் தலையீடு: பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தில் கணினி, வணிகம் சாா்ந்த படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம்

ஒன்றா.. இரண்டா.. எத்தனை நுழைவுத் தேர்வுகள்? இதோ பட்டியல்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



