திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எலவனாசூா்கோட்டையில் ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை

வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2025, 1:50 am IST

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து ஜம்மு காஷ்மீா் முதல் குஜராத் வரை எல்லையோர இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.

இதை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிக்கரமாக முறியடித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், போரில் திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி எலவனாசூா்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பேரணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை சமூக ஆா்வலா் திருமால் செய்திருந்தாா். ஊராட்சித் தலைவா் நந்தகுமாா், துணைத் தலைவா் ஷம்சாத், மதியழகன், நேரு,வெங்கடேசன், ஞானவேல் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.