வீட்டில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவா் கைது

விழுப்புரம் ரயில்வே காலனிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் ரயில்வே காலனிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், வடக்கு ரயில்வே காலனிப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து வீட்டின் உரிமையாளரான க. பிருந்தகுமாா்(38) மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவா் வீட்டில் இருந்த 50 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com