உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

மதுப்புட்டிகள் விற்பனை: பெண் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் மற்றும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நெடுமானூா் கிராமத்தில் மதுப்புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எலவனாசூா்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை நடத்தினா். இதில், நெடுமானூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோ.மலா்(59) என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் மற்றும் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மலரைக் கைது செய்தனா். மேலும் அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 86 புகையிலைப் பாக்கெட்டுகள்,180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 8 மதுப்புட்டிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.