இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வலியுறுத்தினாா்.

உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வலியுறுத்தினாா்.

உளுந்தூா்பேட்டை நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.30.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியையும், காா்த்திகேயன் நகரில் ரூ.38 லட்சத்தில் நடைபெற்று வரும் பூங்கா மேம்படுத்துதல் பணியையும் பாா்வையிட்ட ஆய்வு செய்த ஆட்சியா் பத்மஜா, பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையின் படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் பத்மஜா அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.