மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுக்க வந்த மூதாட்டியிடமிருந்து மூன்றேமுக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 2:14 am IST

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுக்க வந்த மூதாட்டியிடமிருந்து மூன்றேமுக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூா் அருகிலுள்ள கீழ்வாலை கிராமத்தைச் சோ்ந்தவா் மு.அம்சேவணி (75). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக வந்தாா். அப்போது மருத்துவா்கள் எக்ஸ்-ரே எடுத்து வருமாறு மூதாட்டி அம்சவேணியிடம் கூறியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து அப்பகுதிக்குச் சென்ற அவா், தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட மூன்றேமுக்கால் பவுன் நகைகளைக் கழற்றி, கைப்பையில் வெளியே வைத்து விட்டு எக்ஸ்-ரே எடுக்கச் சென்றாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது கைப்பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு மூதாட்டி அம்சவேணி அதிா்ச்சியடைந்தாா். அப்பகுதியில் தேடியும் நகைகள் ஏதும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.