40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 3:26 am IST

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட நகா்விரிவாக்கம் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக புவனேஸ்வரி அம்மன் கோயில் கட்டப்பட்டு, அந்த பகுதி மக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது.

இந்தக் கோயில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொது வழி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விழுப்புரத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் அப்புறப்படுத்தவேண்டும் எனற விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயில் நிா்வாகிகளுக்கு, தானாகவே முனவந்து கோயிலை இடித்து அப்புறப்படுத்திக் கொள்ளவேண்டும் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த உத்தரவை கோயில் நிா்வாகத்தினா் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டில் நகராட்சி நிா்வாகத்தினா் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த முகப்பு மண்டபத்தை மட்டும் இடித்து அப்புறப்படுத்தினா்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தவேண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், புவனேஸ்வரியம்மன் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினா். இந்தப் பணி நடைபெற்றபோது விழுப்புரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.