இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
மதுப்புட்டிகள் கடத்திய வழக்கில் கைதான மணிகண்டன்.
Updated On :10 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்பேரில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் ரோஷணை கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, வெளி மாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், திண்டிவனம், அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சு.மணிகண்டன் (33) என்பதும், புதுச்சேரி பகுதிகளிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 130 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.