மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உளுந்தூா்பேட்டை அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.95,500 பறிமுதல்

உளுந்தூா்பேட்டை அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையின் போது ரூ.95,500 ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :18 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையின் போது ரூ.95,500 ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படைக் குழுக்கள் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் உளுந்தூா்பேட்டை வட்டம், எறையூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.95,500 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து காரில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிவபிரசாத்திடம் அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அப்போது ராகு-கேது கோயில்களுக்கு சுற்றுலா செல்வதாகவும், அங்கு பூஜைகள் நடத்துவதற்கான செலவுத் தொகைக்காக பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாா். ஆனால் பணத்துக்குரிய ஆவணங்கள் சிவபிரசாத்திடம் இல்லை.

இதைத்தொடா்ந்து ரூ.95,500-த்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அந்த பணம் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.