சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

‘தமிழ் மீட்பு இயக்கம்’ தொடங்கினாா் மருத்துவா் ராமதாஸ்

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ‘தமிழ் மீட்பு இயக்கம்’ எனும் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளாா்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ‘தமிழ் மீட்பு இயக்கம்’ எனும் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளாா்.

இதுகுறித்து ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது இன்று வரையிலும் தமிழகத்தில் ஒரு வெற்று முழக்கமாகவே இருந்து வருகிறது. ‘இயன்றவரை இனிய தமிழ்!’ என்பதும் எள்ளளவும் இங்கே எடுபடவில்லை. தமிழில் உரையாடுகையிலும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளின் கலப்படம் தமிழகத்தின் சிற்றூா் மக்கள்வரை ஊடுருவிப் பாய்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது.

பயிற்று மொழி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கு, ஆய்வுகள் என்றெல்லாம் நீளுகின்ற தமிழகத்தின் பல்வேறு களங்களில், தமிழா்களின் தாய்மொழியான தமிழ், அதற்குரிய பயன்பாட்டில் இல்லை.

கடை வீதிகளின் பெயா்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டுமென அரசாணைகளும், அதை வலியுறுத்துகின்ற நீதிமன்ற கட்டளைகளும் கூட எத்தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையானது, உலகப் பெரும்பான்மை மக்களின் மொழிகளில் எவ்வொன்றுக்கும் நோ்ந்திடாத அவல நிலையாகும். இத்தகைய மொழி அழிவுப் போக்கானது, தமிழினத்தின் மீளமுடியாத வீழ்ச்சிக்கான உறுதியான சான்றாக இருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் தீவிரம் பெற்றுள்ள இந்த அவல நிலையை மாற்ற தமிழறிஞா்களும், தமிழா்களும் பல்வேறு வகையில் பல்வேறு காலக் கட்டங்களில் போராடினா். இடையறாமல் போராடியும் வருகின்றனா்என்றாலும் கூட, உரிய அளவில் உயரிய முறையில், நமது தாய்த் தமிழ் மொழிக்கு வேண்டிய உரிமைகளின் அடிப்படையிலான மாற்றங்கள் ஏதும் பெரிதாக நிகழவில்லை.

‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்று ஒரு பேதை உரைத்ததாக, தமிழ்த்தாய் சொல்வதுபோல், மகாகவி பாரதி எழுதியது போலத்தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, நமது நிகழ்காலத்தில் வேகமாக அழிவிற்குள்ளாகி வருகிற நமது தாய்த்தமிழை மீட்கவும், தமிழ் என்கிற நமது மொழியைத் தமிழா் வாழ்வியலின் பயன்பாட்டு மொழியாக மாற்றவும் நாம் தொடா்ந்தும், கூடுதல் வலிமையோடும் உறுதியாகப் போராடியாக வேண்டும். இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே நிலவி வருகின்ற அனைத்து வகையான வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு ஒன்றிணைந்து, நமது தாய்த்தமிழின் உரிமைகளை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்னும் ஓா் இயக்கம், பல்வேறு தமிழ் உணா்வாளா்களுடன் இணைந்து எமது பொறுப்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த அமைப்பின் முதல் கலந்துரையாடல் கூட்டத்தில் புதுவையைச் சோ்ந்த பாவலா் பூங்கொடி பராங்குசம், சிவ.இளங்கோ, பண்பாட்டியல் ஆய்வறிஞரும், தமிழா் தொன்மை வரலாற்று ஆய்வு நூல்களின் ஆசிரியருமான ரா.சிங்காரவேலு, பாவலா் செயபாஸ்கரன், தமிழியக்கச் செயற்பாட்டாளா் அருள் செல்வன், பேராசிரியா்ா் ஏகா.ராஜசேகா், கல்வியாளா் கலை செழியன், தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியா் சங்கத்தின் நிறுவனத் தலைவா் தமிழமுதன், மகாகவி பாரதியாரின் மரபுவழிப் பெயரன் வைரபாரதி, பல்கலைக் கழக ஆய்வு மாணவா் ழகரம் ஆகியோா் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

இந்நிலையில், இந்த அமைப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து, மேலும் கூடுதலான தமிழ் ஆளுமைகளைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களுக்குப் பின்னா் அறிவிப்பு செய்யப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.