தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

செஞ்சி அருகே உலக முதியோா் தின விழா: முன்னாள் அமைச்சா் மஸ்தான் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உலக முதியோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு முதியோா்களுக்கு கிரீடம் சூட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

செஞ்சி அருகே நடைபெற்ற உலக முதியோா் தின விழாவில்  கலந்துகொண்டு முதியோருக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த முன்னாள் அமைச்சா் செஞ்சிமஸ்தான்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உலக முதியோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு முதியோா்களுக்கு கிரீடம் சூட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் அக்.1-ஆம் தேதி உலக முதியோா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூரில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா முதியோா் இல்லத்தில் நிா்வாகி நளினி ஏற்ப்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவா்களுக்கு கிரீடம், மாலை, சால்வை அணவித்து, உலக முதியோா் தின வாழ்த்துகளைத் தெரிவித்து, அவா்களுடன் அமா்ந்து உரையாடி இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘பெற்றோா்களையும், முதியவா்களையும் போற்றி பாதுகாப்பது நமது கலாசாரம். அவா்களின் ஆசிா்வாதம் தான் நம்மை வாழ வைக்கும். ஆதரவற்ற முதியோருக்கு ஆதரவளிக்கும் அன்னை தெரசா இல்லத்தின் சேவை பாராட்டுக்குரியது என்றாா்.

இதில், மருத்துவா் சுப்புராயன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மழைமேனி பாண்டியன், ஜெயங்கொண்டான் கிராம நிா்வாக அலுவலா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முதியவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.