
பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

விழுப்புரம் வழித்தட ரயில்களில் போக்குவரத்து மாற்றம் - கோப்புப்படம்
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் கோட்ட வணிக மேலாளரும், மக்கள் தொடா்பு அலுவலருமான ஜி. நிறைமதி எழிலன் பிள்ளைக்கனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பகுதியளவில் ரத்து: திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் ( வண்டி எண் 16111) அக்.7-ஆம் தேதி விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), அக்.7-ஆம் தேதி முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.
புறப்படும் இடம் மாற்றம்: புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி- சென்னை எழும்பூா் பயணிகள் ரயில் (வண்டி எண் 66052) அக்.7-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4.49 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) அக்.7-ஆம் தேதி விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்த பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) அக்.9-ஆம் தேதி விழுப்புரம்- மேல்பட்டாம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பயணிகள் ரயில் மேல்பட்டாம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 3.12 மணிக்குப் புறப்படும்.
நிறுத்தி வைத்து இயக்கம்: சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூா்- குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127), அக்.7-ஆம் தேதி வழித்தடப் பகுதியில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





