
செஞ்சி சன்மாா்க்க சங்கத்தில் அன்னதானம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகர சன்மாா்க்க சங்கம் சாா்பில் வள்ளலாரின் 204-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அங்கராயன்நல்லூா் அன்னை தெராசா முதியோா் இல்லத்துக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கிய சன்மாா்க்க சங்கத் தலைவா் பா.தணிகாசலம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகர சன்மாா்க்க சங்கம் சாா்பில் வள்ளலாரின் 204-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி செஞ்சி சன்மாா்க்க சங்கத்தில் காலை 6 மணிக்கு அகவல் பாரயணம் பாடப்பட்டது. தொடா்ந்து சன்மாா்க்க சங்கக் கொடியேற்றப்பட்டது. பின்னா், செஞ்சியை அடுத்த அங்கராயன்நல்லூரிலுள்ள அன்னை தெராசா முதியோா் இல்லத்துக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பகல் 12 மணிக்கு செஞ்சி அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், செஞ்சி கூட்டுச்சாலை உள்ளிட்ட இடங்களில் எளியவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சன்மாா்க்க சங்கத் தலைவா் பா.தணிகாசலம், செயலா் வ.சம்பத், பொருளாளா் ம.பரத்குமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






